தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வேலூர் மண்டலம் சார்பில் மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வேலூர் தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி திட்டக்கிளை தலைவர்கள் காமராஜ் ஜெயபால் துரை ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் எம்.கோவிந்தராஜ், மாநில செயலாளர் எஸ்.ஜோதி, சிஐடியு மாவட்ட தலைவர் டி.முரளி, திட்டக்கிளை செயலாளர்கள் சின்னதுரை, சந்திரசேகரன், முனிசாமி, விவசாயிகள் சங்க முன்னாள் மாநில செயலாளர் எஸ்.தயாநிதி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன்,மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வேலூர் மாவட்ட செயலாளர் கு.தர்மன் ஆகியோர் பேசினர்.
