tamilnadu

img

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியர்களுக்கு வாரந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதுடன் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் படி, தினமும் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஊக்கத்தொகை என்பது கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் மணி நேர வேலை செய்தாலும் போதிய சம்பளம் கிடைப்பதில்லை. எனவே, பழைய நடைமுறையை ஸ்விக்கி நிறுவனம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

;