tamilnadu

img

நிர்மல் பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு

சென்னை,மே.6-நிர்மல் பள்ளியில் ஆங்கிலம் பேச, எளிய கணிதம், அறிவியல் கருத்துக்கள்,கதை சொல்லிப்பழகுதல், நாடகம் உள்ளிட்ட கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.சென்னை அயன்புரம் ஒர்க்கர்ஸ் எஜூகேசன் டிரஸ்ட்நடத்தும் நிர்மல் பள்ளியில் இந்தாண்டு ஏழை மாணவர்கள் பயன்பெறும் நோக்கோடு பள்ளி நிர்வாகம்இலவசமாக கோடை பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.  பயிற்சியின் ஒருபகுதியாக மாணவர்கள் பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமின் நிறைவு நாளில் கல்விக்குழு தலைவர்பூபாலன், ஆர். பெருமாள்,நாராயணன் சாமி(ஆசிரியர்கள் சங்கம்), ஹேமா, மலர்விழி (தமுஎகச), அரவிந்தன், செல்வகுமாரி (அறிவியல்இயக்கம்), பேரா.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடினர். பள்ளி தலைமை ஆசிரியர் டி.உஷா, பள்ளி மேலாளர்கள் குமார், டில்லிபாபு, என்.லோகையா, ஆசிரியர் உஷா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இந்தாண்டு இப்பள்ளி மாணவிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

;