கோவை, ஆக. 30– தேசிய மாணவர்படை மாணவர்க ளுக்கு உயற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் தொடர்ந்து வழங்க “பிட் இந்தியா ரன்” என்னும் நிகழ்வை தேசிய மாணவர் படை அமைப்பு நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரண மாக வீடுகளிலேயே முடங்கிக் கிடக் கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் “பிட் இந்தியா ரன்” என்ற நிகழ்வை தேசிய மாணவர் படை அமைப்பு ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் அக்டோபர் 2 ம் வரை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே யோகா, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்ற பயிற்சிகளைப் பெற தேசிய மாணவர்படை அமைப்பு அறிவுறுத் துகின்றது. இதனடிப்படையில், கோவை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண் டர், தேசிய மாணவர் படை மாணவர்க ளுக்கென தனியான வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதில் யோகா, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, படியே றும் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற நிகழ்வுகளை வீடியோவாகக் கொடுக்கிறார். இதன்மூலம் மாணவர்கள் தங்கள் வீடுகளில் அப்பயிற்சிகளை பாதுகாப் புடன் மேற்கொண்டு அதனைப் பதிவு செய்து ஆசிரியருக்கு அனுப்புகின்ற னர். இதுதவிர தேசிய மாணவர்படை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகின்றன.