10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்ஜெக்டிவ் தேர்வுமுறை குறித்தான பயிற்சியை அனைத்து பள்ளிகளும் வழங்கவேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
வரும் 16 ஆம் தேதி தொடங்கும் முதல் பருவத்தேர்வுகள் நவம்பர் 22 வரை நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மொத்தம் உள்ள 189 பாடங்களில் முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், காலையில் 11:30க்கு தொடங்கும் தேர்வானது மதிய 1 மணிவரை நடைபெறும் என்றும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக ஒஎம்ஆர் தாளில் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதால் அதற்குண்டான பயிற்சியை பள்ளி நிர்வாகம் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.