tamilnadu

img

புறநகர் மின்சார ரயில் சேவையை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் வாலிபர் சங்க செங்கல்பட்டு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

புறநகர் மின்சார ரயில் சேவையை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் வாலிபர் சங்க செங்கல்பட்டு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

செங்கல்பட்டு, செப்.8- சென்னை கடற்கரையிலி ருந்து செங்கல்பட்டு வரை வந்து செடிலலும் மின்சார ரயில் சேவையை மேல்மருவத்தூர் வரை நீடிக்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செங்கல் பட்டு மாவட்ட 16 வது மாநாடு சனிக்கிழமையன்று (செப்.6) பேரணி, பொதுக் கூட்டத்துடன் துவங்கியது. வெண்கொடியேந்திய வாலி பர்கள் திரளாக பங்கேற்ற னர். பொதுக்கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் உரை யாற்றினர். முன்னதாக, கிராமிய இசை, பாடல்கள், வீர விளையாட்டு நிகழ்ச்சி கள் நடைபெற்றது.   இதைத் தொடர்ந்து, செப்.7 அன்று மாவட்டத் தலைவர் இரா.சதீஷ் தலை மையில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்டத் துணைச் செய லாளர் .கு.இராமசாமி கொடி ஏற்றி வைத்தார். வரவேற்புக்குழு சிறப்புத் தலைவர். க.புருசோத்தமன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ஆர். அபிராமி மாநாட்டை  துவக்கி வைத்தார்.  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர். ஆர்.தயாநிதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர். ஜி.ஜெயந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைச் செயலாளர் டி.சந்துரு  நிறைவுரையாற்றினார். தீர்மானம்  சென்னைக்கு வேலை செல்லும் இளைஞர்களுக்கு வசதியாக மேல்மருவத்தூர் வரை மின்சார ரயில் நீட்டிப்பு செய்யவேண்டும், செங்கல்பட்டில்  அருகில் உள்ள திருமணி எச்பிஎல் நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்,  ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்,  மருந்து,மாத்திரைகளை தடையின்றி வழங்கிட வேண்டும் ,செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிவும் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்தவேண்டும்,  உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டும்,  மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்தி புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்,   அனைத்து வட்டாரங்களிலும் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியை துவங்க வேண்டும், சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணியை போர்க்கால அடிப்படையில் துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவராக ச.ஜீவா னந்தம், செயலாளராக இரா.சதீஷ், பொருளாளராக என்.சுந்தர் உள்ளிட 21 பேர் கொண்ட  மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.