tamilnadu

img

ஓசூரில் சாலை விபத்தில் மாணவர்கள் பலி : சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

ஓசூரில் சாலை விபத்தில் மாணவர்கள் பலி : சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

கிருஷ்ணகிரி,ஜூலை 16 - ஓசூர் அருகே செவ்வாயன்று லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஓசூர் அருகே நவதியைச் சேர்ந்த  கோவில்  பூசாரியான ஜெகநாதன் மகன்  மதன் (வயது14)  மிடுகரப்பள்ளியைச் சேர்ந்த வீரேந்திர சிங் மகன்  ஆரியன்சிங், அதே பகுதியைச் சேர்ந்த  தனியார் பள்ளி பேருந்து  ஓட்டுநர் மோகன்பாபு மகன்  ஹரிஷ் அந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் மூவரும் நண்பர்கள். செவ்வாயன்று (ஜூலை  14) இவர்கள் மூவரும் ஒரே  மோட்டார் சைக்கிளில் சென்றனர்.       மத்திகிரி கூட்ரோடு அருகில் சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். ஆரியன்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் வழியிலேயே இறந்தனர். தகவல் அறிந்து சிபிஎம் மாநகரச் செயலாளர் நாகேஷ்பாபு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உடல்களை பார்வையிட்டார்.                 இந்த விபத்தில் பலியான மிடுகரப்பள்ளி மோகன்  பாபு மகன் ஹரிஷ் வாலிபர் சங்க, உறுப்பி னராக இருந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற சிபிஎம் அகில இந்திய மாநாட்டிலும் செந்தொண்டராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் ஹரிஷ் உடலுக்கு  சிபிஎம் மாவட்டச் செயலாளர் சுரேஷ்,மாநகர செயலாளர் நாகேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர்கள் சேகர்,மகாலிங்கம், சி.பி.ஜெயராமன், லெனின்முருகன்,ஒன்றிய செயலாளர் ஆர்.கே.தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் அனுமப்பா,இளவரசன், சக்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார்,மூத்த தோழர்கள் சேதுமாதவன்,சி.முத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.