ஐஐடி-யில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது
சென்னை, ஆக.9 - மதவாத ஆர்எஸ்எஸ் அமைப்பு, சென்னை ஐஐடி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஆர் எஸ் எஸ் அமைப்பும் ஐஐடி மெட்ராஸ் மாணவர் மைய மும் (ஐஐடி மெட்ராஸ் வித்யார்த்தி மிலன்) இணைந்து சனிக்கிழமை யன்று (ஆக.9) ரக்ஷா பந்தன் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐஐடி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ ராம கிருஷ்ண பிரசாத் ஜி பங்கேற்பதாக அழைப்பு வெளியிடப்பட்டிருந்து. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஐஐடி முன்பு போராட்டம் நடத்த வந்தனர். மாணவர்களை வழிமறித்து காவல்துறையினர் குண்டுக் கட்டாக கைது செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி, “மத வாதத்தை பரப்பும், தீவிர வாத ஆர்எஸ்எஸ் அமைப் பின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஐஐடி-யில் நடை பெறுகிறது. தடை செய்யப் பட வேண்டிய அமைப்பை வைத்து நிகழ்வை நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குருகுலத்தில் வேதம் படிப்பவர்கள் நேரடியாக ஐஐடியில் சேரலாம் என்ற ‘சேது பந்த யோஜனா’ திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஐஐடி-யை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்நிகழ்வு அரங்கேற்றப்படுகிறது.” என்றார். இந்தப்போராட்டத்தில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர்நீதி, செயலாளர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.