மின் விசிறி, மின் விளக்கு, கழிவறை வசதி வேண்டும் திருவாரூர் எம்எல்ஏ-விடம் மாணவர் சங்கம் மனு
திருவாரூர், அக்.25 - திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரி யில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் இந்த மாணவர்களுக்கான அடிப் படை வசதிகள் இல்லை. இதனை வலியுறுத்தி கல்லூரிக்கு வருகை தந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணனிடம் இந்திய மாணவர் சங்கத் தின் கல்லூரி கிளை சார்பாக மனு அளிக்கப் பட்டது. அந்த மனுவில், “தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக எங்கள் கல்லுாரியில் அடிப்படை வசதிகள் இல்லை. சில வகுப்புகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இல்லை. கழிவறைகள் சுத்த மின்றி சுகாதாரக் கேடாக உள்ளன. கல்லூரி நேரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளும் சரி யான முறையில் இயக்கப்படு வதில்லை. கல்லூரிக்கு என கடந்த காலங்களில் நான்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது மூன்று பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. கல்லூரி நேரத்தில் பேருந்து களை அதிகப்படுத்தவேண்டும். மாணவர்கள் நலன்கருதி உடனடியாக கல்லூரிக்குத் தேவை யான அடிப்படை வசதிகள் செய்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மனு அளிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.சுகதேவ், மாவட்டத் தலைவர் பா.விக்னேஷ், மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ், கல்லூரி கிளைச் செயலாளர் செல்வகணபதி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
