tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்

சென்னை, ஜூன் 27 - மோடி அரசின் மோட்டார் வாகனசட்டத்தை திரும்பப் பெறும் வரை தொழிலாளர்கள் தொடர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட வேண்டும் என சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்ததராசன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் 53 ஆவது பேரவை கூட்டம் ஜூன் 25, 26 ஆகிய தேதி களில் திருவொற்றியூரில் நடை பெற்றது.  இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது:- கன்னியாகுமரி, ஊட்டி உள்ளிட்ட பல  போக்குவரத்து வழித்தடங்கள் தனியார்க்கு அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டம் அமலானால் அனைத்து வழித்தடங்களும் தனியார் மயமாகும். போக்குவரத்து துறையின் ஜீவாதாரமே வழித்தடம் தான். அதை தனியார்க்கு தாரை வார்த்தால் இந்த துறை அழிவை நோக்கி பயணிக்கும். மத்திய பாஜக அரசின்  மோச மான மோட்டார் வாகனசட்டத்தால் சுமார் 10 கோடி பேர் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும். இதன் பாதகம் தெரியாமல் சில முக்கிய கட்சிகள் கூட மக்களவையில் ஆதரவு தெரி வித்தது பரிதாபத்திற்குரியது.  தொழிலாளிவர்க்கம் , இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் வலுவான கூட்டணியால் தமிழகத்தில் அதிமுக , பாஜக மண்ணை கவ்வியது. ஒட்டுமொத்த தொழிலாளர்களில் 30 விழுக்காட்டின ரை திரட்டினாலே ஊழல், மதவெறி சக்திகளை விரட்டியடிக்க முடியும். அதற்கான வேலையை தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டும். மோட்டார் தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்கள் நினைத்தால் போராட்டத்தின் மூலம் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்ய முடியும். அமைப்புசாரா தொழி லாளர்களையும் இதர மோட்டார் தொழிலாளர்களை ஓரணியில் திரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் சிஐடியு மூத்த உறுப்பினர்களின் தியாகத்தை பாராட்டி சால்வைகள் அணி விக்கப்பட்டன. ஆண்டுப் பேரவையை நடத்திய தண்டை யார் பேட்டை பணிமனை 1 தொழி லாளர்களை பாராட்டி பூந்தமல்லி பணிமனை ஊழியர்கள் மரக்கன்று களை பரிசாக வழங்கினர்.