tamilnadu

தீவிரமடையும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான போராட்டம்

பாஜக ஆளும் அசாம் மாநி லத்தில் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல் படுத்தக்கோரி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழு வதும் லேசான அளவில் ஆங்காங்கே  போராட்டம் நடைபெற்று வந்த நிலை யில், திங்களன்று ஒட்டுமொத்த அரசு  ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து தலைநகர் கவுகாத்தியில் பிரம் மாண்ட போராட்டம் மற்றும் பொதுக்  கூட்டம் நடத்தியது. இந்த போராட்  டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழி யர்கள்திரண்டனர். மேலும் இந்த  போராட்டத்திற்கு எதிர்க்கட்சித்  தலைவர்கள் ஆதரவு தெரிவித்து  போராட்டக்களத்தில் இறங்க உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இத னால் ஆளும் பாஜக அரசு கலக் கத்தில் ஆழ்ந்துள்ளது.