அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு
தமிழக அரசு பரிசீலனை சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச் சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிச லில் 41 பேர் பலியான துயரச் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங் களை நடத்துவதற்கு கடும் கட்டுப் பாடுகளை விதிக்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. காலி இடங்கள் மற்றும் மைதா னங்களில் மட்டுமே அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்ப டும். சாலைகளில் பொதுக் கூட்டங் கள் நடத்த அனுமதி இல்லை. கூட்டங்களில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அர சியல் கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். கூட்டத்தில் உயிரிழப்பு நடந்தால் ஏற்பாட்டா ளர்களே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். புதிய கட்டுப்பாடுகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தமிழக அரசு ஆலோசனை நடத்த முடிவு செய் துள்ளது. தேர்தலுக்கு முன்பாக இந்த கட்டுப்பாடுகளை அமல் படுத்த அரசு உறுதியாக உள்ளது.