போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, 50ஆவது நாளாக திங்களன்று (அக்.6) தொடர் காத்திருப்பு போராட்டம் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிவலிங்கம் தலைமையில் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் எஸ்.ராஜேந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் பி.ரமேஷ், அ.ஜெனிட்டன். பொதுச் செயலாளர் பி.சினிவாசன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
