மாநில அளவில் குத்துச்சண்டை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவர் அசத்தல்!
திருவள்ளூர், அக்.8- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முனுசாமி - தீபா தம்பதியின் மகன் தேவா ஆகாஷ் (15). பள்ளியளவில் மாநில மற்றும் தேசிய அளவில் நடை பெற்ற பல்வேறு வகை குத்துச்சண்டை போட்டி களில் களம் கண்டு வெற்றி பெற்ற தேவா, கடந்த 3, 4 மற்றும் 5 தேதிகளில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 70 - 75 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட குத்துச்சண்டை வீரர்களு டன் போட்டியிட்ட கும்மிடிப் பூண்டியைச் சேர்ந்த தேவாஆகாஷ்முதலிடம்பிடித்துசாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து மாநில அளவில் வெற்றி பெற்ற இவர், வரும் 27 ஆம் தேதி அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெறும்தேசிய அளவி லான குத்துச்சண்டை போட்டியில், தமிழகம் சார்பாக தேவா ஆகாஷ் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற்ற பள்ளி மாணவர் தேவா ஆகாஷ் , பயிற்சியாளர் பாக்சர் கஜேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
