tamilnadu

img

கள்ளக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம்

கள்ளக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம் 

கள்ளக்குறிச்சி, ஆக. 7- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் ஊராட்சி ஒன்றியம், விருகாவூர் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஒன்றியக் குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பழனி குமார், தாசில்தார் பசுபதி, ஒன்றிய குழு துணைத் தலைவர் நெடுஞ்செழியன், அட்மா திட்ட குழு தலை வர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேலு வரவேற்றார். இதில் விருகாவூர், முடியனூர், மடம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்கள் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 700-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.  இந்த மனுக்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்களுக்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர் பழனியம்மாள் அய்யாசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோவன், சந்திர லேகா அருள், சுரேஷ் மற்றும் ஒன்றிய கவுன்சி லர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.