புனித டேவிட் கோட்டை புனரமைப்பு பணி
கடலூர், செப். 5 - கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித டேவிட் கோட்டையின் புனரமைப்பு பணி கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை சுமார் 200 ஆண்டுகளைக் கடந்த பழமைவாய்ந்த கட்டடமாக அடையாளப்படுத்தப்படும் ஒரு புராதன சின்னமாக விளங்குகிறது. தற்போது இக்கட்டடம் தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பழமை வாய்ந்த வரலாற்றுத் தொன்மையான கட்டடங்களைப் பராமரித்துப் பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சியர் அலுவலகமாகச் செயல்பட்ட தற்போதைய பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டவுன்ஹால் அரங்கம் புனரமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து புனித டேவிட் கோட்டை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வரப்பட்டுள்ளன. இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு சுமார் 120 ஆண்டுகள் பழமையானது என்பதால் பல்வேறு நிலைகளில் சேதம் மற்றும் பழுதடைந்துள்ளது. இக்கட்டிடத்தை புனர மைத்து புதுப்பிக்க அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் பழமையான இக்கட்டடம் அதன் தன்மை மாறாமல் புதுபிக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரலாற்றுத் தொன்மை யைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சுற்றுலாத் தளமாகவும் உருவாக்குவதன் மூலம் உள்ளூர் பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புடன் பொருளாதார வாய்ப்புகளும் கிடைக்கும் என்று ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தொல்லியல் துறை செயற்பொறியாளர் தேவேந்திரன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், கடலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கிரேசி மற்றும் அகஸ்டின் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.