tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.5.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை விடுவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.5.34 கோடி  சிறப்பு ஊக்கத்தொகை விடுவிப்பு

திருவள்ளூர், ஜூலை 31- கரும்பு விவசாயிகளுக்கு ரூ.5.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை விடு விக்கப்பட்டுள்ளதாக  திருவள்ளூர் ஆட்சி யர்  மு.பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருத்தணி கூட்டுறவு சர்க்கரையில் 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 1.53 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யப்பட்டது. இந்த, அரவை பரு வத்திற்கு கரும்பு சப்ளை செய்த மொத்தம் 1,526 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் மொத்த தொகையாக ரூ.5.34 கோடி கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டத்தின் மூலம் 2025-26ம் ஆண்டு நடவு பருவத்தில் புதிய நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு, ஆலையின் மூலம் அகலபாருடன் கூடிய பருசீவல் நாற்று நடவிற்கு ஏக்கருக்கு ரூ.7,450 மானிய மும், அகலபாருடன் கூடிய ஒரு பரு விதைக்கரணை நடவு செய்யும் விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,200 மானிய மும் வழங்கப்படவுள்ளது. எனவே, அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து ஆலைக்கு பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தாக்குதலை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாம்பரம் பகுதி தேவநேசன் நகர் கிளை தலைவர் மணி தாமஸ் மீது சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வடசென்னை மாவட்டக் குழு சார்பில் பெரம்பூர் எம்.கே.பி. நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஜி.நித்யராஜ், தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், பொருளாளர் விஜய், துணைத் தலைவர் கார்த்திக், பகுதி தலைவர் சுரேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.