தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சனிக்கிழமையன்று (ஜூலை 13) நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கேரள ஆளுநர் ப.சதாசிவம், உச்சநீதிமன்ற நீதியரசர் ஷரத் அரவிந்த் போப்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமணி ஆகியோர் மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டங்களை பெற்றுகொண்டனர். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சவிதா கோவிந்த், அமைச்சர் சி.வி.சண்முகம், பல்கலைக்கழக துணை வேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி ஆகியோர் உடனிருந்தனர்.