tamilnadu

img

சிறப்பு பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படும்...

சென்னை:
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு, தீபாவளிக்கு, சென்னையிலிருந்து குறைவான சிறப்புப் பேருந்துகளே இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள் ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத் துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னையிலிருந்து வழக்கம் போல கோயம் பேடு, கே.கே. நகர், மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய ஐந்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே வேளையில், சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவான பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.சென்னையில் 13 முன் பதிவு மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இதுவரை 27 ஆயிரம் பேர் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்குக் குறைவாக 14,757 சிறப்புப் பேருந்துகள் நவம் பர் 11, 12, 13 ஆகிய நாள்களில் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக 16,026 பேருந்துகள் நவம்பர் 15, 16, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.தற்போது கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகை இரண்டு வாரங்களில் கொண்டாடப்படவுள்ளது. 

இதைக் கொண்டாடு வதற்கு சொந்த ஊர் களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பெரும் பாலான ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு முடிந்த  நிலையில், பொதுமக்களின் இறுதிநேர பயணத்துக்கு அரசுப் பேருந்துகளைத் தேர்வு செய்வது வழக்கம்.  அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளிக்கு முன் தினம் உள்ளிட்ட நாள்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெறும் நிலையில், சிறப்புப்பேருந்துகள் குறித்த அறிவிப்பு   வெளியிடப் பட்டுள்ளது.