சென்னை,நவ. 6 ஈரோட்டில் நவம்பர் 27 முதல் 30ஆம் தேதி வரை `வீவ்ஸ்’ தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சியை 2-வது ஆண்டாக இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து நடத்துகின்றன. கடந்த ஆண்டு ஈரோட்டில் `வீவ்ஸ்’ தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி நடைபெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 2வது ஆண்டாக இந்தக் கண்காட்சி, தென்னிந்தியா வின் மிகப்பெரிய மொத்த ஜவுளி சந்தையான ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெறு கிறது. `வீவ்ஸ்’ தமிழ்நாட்டில் நடைபெறும் கண்காட்சிக ளில் முதன்மையான ஜவுளிக் கண்காட்சி ஆகும். கைத்தறி, பவர்தறி தொழில் துறையை ஊக்கு விப்பதில் முக்கிய கவனம் செலுத்தும் நிகழ்ச்சியாக வீவ்ஸ் உள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 250க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்ப டுத்த இருக்கிறார்கள். இந்த கண்காட்சியில் பாரம்பரிய மற்றும் பின்னல் ஆடைகள், கைத்தறி மற்றும் காதி, வீட்டு அலங்கார துணிகள், ஜவுளி எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன என்று டெக்ஸ்வேலி துணைத் தலைவர் சி. தேவராஜன் கூறினார். மேலும் அவர் கூறுகை யில், இந்த கண்காட்சி சர்வதேச கண்காட்சியாக நடத்தப்படுவதால், 4 ஆயி ரம் முதல் 5 ஆயிரம் நெசவா ளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.