tamilnadu

அமைச்சர் பி. மூர்த்தி தலையீட்டால் தீர்வு பணிநீக்கம் செய்யப்பட்ட 23 மாநகராட்சித் தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு

அமைச்சர் பி. மூர்த்தி தலையீட்டால் தீர்வு   பணிநீக்கம் செய்யப்பட்ட 23 மாநகராட்சித் தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு 

மதுரை, அக். 19-  மதுரை மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன மான ‘அவர்லேண்ட்’-ஆல் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 23  தொழிலாளர்கள், தமிழக வணிகவரி -பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தியின் நேரடித் தலையீட்டை  அடுத்து மீண்டும் பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். பொய்க்குற்றச் சாட்டினால் சட்டத்துக்குப் புறம்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க நிறுவனம் மறுத்ததால், சிஐடியு மற்றும் எல்எல்எப் தொழிற்சங்கங்கள் அக் டோபர் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தத் தீர்மானித் திருந்தன. இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குரல் கொடுத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பி. மூர்த்தி தலையிட்டு நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையில், அவர்லேண்ட் நிறுவனம் 23 தொழிலாளர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வும், தீபாவளிக்கு முன்பாக அட்வா ன்ஸ் வழங்கவும் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அக். 21 அன்று நடத்த விருந்த வேலைநிறுத்தத்தை தொழிற் சங்கங்கள் ரத்து செய்துள்ளன. தொழி லாளர்கள் வழக்கம்போல் அக். 21 முதல் பணிகளைத் தொடங்குவார்கள் என்று சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிரமணியம் மற்றும் எல்எல்எப் தொழிலாளர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கோ.பூமிநாதன் ஆகி யோர் கூட்டறிக்கையில் தெரிவித்துள் ளனர்.