உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய சனாதன வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நீதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி வேலூர் மாவட்டம் சார்பில்அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் பி.காத்தவராயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.குபேந்திரன், பொருளாளர் சி.ஞானசேகரன் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் மு.காசி, தவிச மாவட்ட செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம், விதொச மாவட்ட தலைவர் பி.குணசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
