tamilnadu

img

நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம்: விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம்:  விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், அக்.9 – உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசியதை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, மாநில துணைத்தலைவர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு  பேசினர். மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், வழக்கறிஞர் சங்க மாநிலப் பொருளாளர் மு.காளிதாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.