நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மைக்காலங்களில் எதிர்க்கருத்து உடையவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாலியல் ரீதியாக மிரட்டும் போக்கு சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800ல் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதற்கு தமிழகத்தில் ஒருதரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் ரித்திக் என்ற பெயரில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் தோனி ஐபிஎல் போட்டி0யில் சிறப்பாக விளையாட வில்லை என்பதற்காக இவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்று இன்ஸ்டாகிராமில் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து12 ஆம் வகுப்பு சிறுவனை கைது செய்து குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.