tamilnadu

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

செங்கல்பட்டு, ஏப்.4-


காஞ்சிபுரத்தில் நான்குபேர் கொண்ட பாலியல் வன்கொடுமைக்குளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 92 டி- யின் கீழ் இணைக்க வேண்டும் என அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.அரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-காஞ்சிபுரம் நகரில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று சமுக விரோதிகள் 4 பேர் பாலியல் வன்கொடு மைக்குள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கின்றது. இது குறித்து விஸ்னு,காஞ்சி காவல் நிலையத்தில்புகார் பதிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து உண்டி ராஜா, தேவா ஆகியஇருவர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரைக் காவல் துறையினர் தேடிவந்த நிலையில் அவர்கள்நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரைச் சந்தித்து அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, தாமோதரன், ஆகியோர் ஆறுதல் கூறியுள்ளனர். இவ்வழக்கு விபரங்களைச் செங்கல்பட்டில் இயங்கும் குழந்தைகள் நலக்குழுமத்திற்குக் காவல் துறையினர் உரிய தகவல் தெரிவிக்காததால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க இயலாதநிலை உள்ளது. 


சிறுமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும்.இந்த வழக்கை 2012 போக்சோ சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மாற்றுத்திறனாளி என்பதால் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 92 பிரிவு டி- யின் கீழ் இவ்வழக்கை இணைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுக்கும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட உறுதியான பிரிவின் கீழ் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.காட்டுமிராண்டித் தனமான குற்றச் செயலில்ஈடுபட்டுள்ள இக்குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கக் கோரும் வழக்கில் பொள்ளாச்சி சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;