tamilnadu

img

வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததில் பி.எஸ்.கிருஷ்ணன் பங்கு குறிப்பிடத்தக்கது படத்திறப்பு விழாவில் கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி

சென்னை, நவ. 16- வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் மறைந்த ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன்  பங்கு குறிப்பிடத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ் ணன் புகழஞ்சலி செலுத்தினார். டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் வழி யில் இந்திய சமூக நீதி சட்டங்கள் மற்றும் திட்டங்களை வடிவமைத்து, வலுப்படுத்த பாடுபட்ட  பி.எஸ்.கிருஷ்ணன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி வெள்ளியன்று (நவ.15) சென்னை எழும்பூர் பாந்தி யன் சாலையில்  உள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்  பி.சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து  பேசியதாவது:  ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பட மகத்தான பணியாற்றிவர் கிருஷ்ணன்.  உயர்சாதி குடும்பத்தில் பிறந்திருந்தா லும் அவரது சிந்தனையும் செயல்பா டும்  தலித் மற்றும் நலிவுற்ற சிறு பான்மை மக்களின் நலனுக்காகவே இருந்தது. அவர் நினைத்திருந்தால் மிக உயர்ந்த பதவியில் செழிப் போடு இருந்திருக்கலாம். அதனை யெல்லாம் எளிய மக்களுக்காக துறந்தவர். 1957ல் ஐஏஎஸ் படிப்பை முடித்து அவர் முதன்முதலாக நிலச் சீர்திருத்தத் துறையில் அதிகாரி யாக பணியாற்றினார். பெருநிலத்தை வைத்திருந்த நிலப் பிரபுக்கள், அமைச்சர்கள், எதிர்ப்புகளையும் சக அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி ஏழைகளுக்கு நிலம் கிடைப்பதை உறுதி செய்தார்.  வன்கொடுமை சட்டம் கொண்டு வந்ததற்கும், சமூக நீதியை பாதுகாப்ப தில் தலித் மற்றும்  இடதுசாரிகள் இயக்கத்தின் பங்குகளுக்கு ஈடாக அரசு அதிகாரியான பிஎஸ்.கிருஷ்ண னின் பங்கும் அளப்பறியது.சாதிய ஏற்றுத்தாழ்வுக்கு  பொருளாதாரம் தான் காரணம் என்பதை உணர்ந்து அதனை களைவதற்கான வழியை மிக நுணுக்கமாக செய்யமுற்பட்டார். நில உடமை ஏற்றத்தாழ்வை களைய வேண்டும் என இடதுசாரிகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருந்த போதே பிஎஸ்கே நிர்வாக ரீதியாக  செயல்பாட்டில் இறங்கினார். ஆந்தி ரத்தில் மத சிறுபான்மையினரான முஸ்லீம் மக்களுக்கு 3விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்க ஏற்பாடு செய்த வர் பிஎஸ்கே. அடித்தட்டு மக்களின் குரலாக செயல்பட்ட மரியாதைக்குரிய கிருஷ்ணன் பணி ஓய்வுக்குப்பிறகும் இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 29  ஆண்டுகள், கடைசிமூச்சு உள்ளவரை  களப்பணியாற்றியவர். சமூகப் போராளியாக விளங்கிய பி.எஸ்.கிருஷ்ணன் தலைசிறந்த இடதுசாரி சிந்தனையாளராக விளங்கினார் என்றார். 

விளிம்புநிலை மக்களுக்காக உழைத்தவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசு கையில், உயர்சாதி பார்ப்பன பெரு மிதத்தோடு சொகுசாக வாழ்க்கை யில் வாழாமல் விளிப்புநிலை ஒடுக்கப் பட்ட மக்களின் நலனுக்காகவே இறுதி நாள்வரை தீவிரமாக சிந்தித்தவர். முன்னாள் துணைவேந்தர் வே. வசந்தி தேவியுடன் இணைந்து களப்  பணியாற்றியவர். உண்மையான ஜன நாயக சக்தியாக வாழ்ந்துகாட்டிய வர். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை  வடிவமைப்பதில் பெரும்பங்காற்றிய வர், சிறப்பு உட்கூறு திட்டத்தை உரு வாக்கி செயல்படுத்த காரணமாக இருந்தவர். அரசியல்வாதிகளால் செய்யமுடியாத பல ஆக்கப்பூர்வ மான சிந்தனைகளுக்கு செயல்வடி வம் கொடுத்தவர் என்று கூறிய திரு மாவளவன், கல்வியாளர் வசந்தி தேவி அவர்களின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்கே அவர்களின் சாசனத் தின் வழிநின்று எங்கள் போராட்ட வியூகங்களை வகுப்போம் என்றார்.

சாதி அமைப்பு இந்திய நாகரிகத்தின் கொடிய குற்றம்
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் வே.வசந்திதேவி பேசுகையில், இந்திய அரசு அதிகாரி களில் பி.எஸ். கிருஷ்ணனின் வாழ்வும்,  பணியும் அரிதினும் அரிது. ஒடுக்கப்  பட்டோரை நோக்கி, ஆட்சி அதி காரத்தையும் பொது நிர்வாகத்தையும் வளைப்பதற்காக, தனது வாழ்வை அவர் அர்ப்பணித்திருக்கிறார். உயர்  சாதியாகக் கருதப்படுவதில் பிறந்த  நேரிட்ட அவர், சாதி அமைப்பின் மீது  கடுமையான போர் தொடுத்து வந்தார்.  “சாதி அமைப்பு இந்திய நாகரிகத்தின் கொடிய குற்றம்” என்பது அவரது உறுதியான நிலைபாடாக இருந்தது. அம்பேத்கர், காந்தி, நாராயண குரு, விவேகானந்தர், பெரியார், மார்க்ஸ் தத்துவங்களின் துணையோடும், சாதி கள் பற்றிய அவரது கலைக்களஞ்சிய புரிதலொடும், அரசியல் சாசன அடிப்  படையிலும், வலிமையான யுக்திகளை  அவர் உருவாக்கினார். ஆங்கிலத்தில் உள்ள அவரது சாசன வரைவு புத்த கத்தை தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும். நீதியின் மீதும், மனித உரிமைகள் மீதும், இந்திய அரசியல் சாசனத்தின் இலட்சியக் கண்ணோட்டத்தின் மீதும், நம்பிக்கை உடையவர்களுக்கும், அனைத்து இந்தியர்களின் சமூக அளவிலான, பொருளாதார அளவி லான முன்னேற்றத்தை வேண்டுபவர்க ளுக்கும், இந்தப் புத்தகம் விலை மதிப்பு இல்லாத பொக்கிஷம். சமூகவி யல், மானுடவியல், வரலாறு உள்ளிட்ட துறைகளிலும், இந்திய  ஆட்சிப் பணி, நீதித் துறைகளுக்கான  பயிற்சிகளிலும் இந்தப் புத்தகம் கட்  டாய வாசிப்பாக சேர்க்கப்பட வேண்டும் அதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் மக்கள் மத்தி யில் கொண்டு சென்று அதன் செயல்  வடிவத்திற்காக பணிசெய்ய வேண்டும் என்றார்.

கடைசி மூச்சு வரை...
தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் தலைவர் பெ.சண்முகம்  பேசுகையில் சமூகநீதிக்கான போராட் டத்தின் ஒப்பற்றத்தலைவனாக விளங்கிய பி.எஸ்.கிருஷ்ணன் சாதிய  ஒழிப்புக்கான சென்னை பிரகடனத்தை  உருவாக்கியவர். தாழ்த்தப்பட்ட சிறப்பு உட்கூறுத்திட்டத்தை முதன் முதலாக உருவாக்கியதோடு சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார். இந்திய வரலாற்றில் இது போன்ற ஒரு அரசு அதிகாரியை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு மக்கள் பணி செய்தவர்.  தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே சிந்தித்தவர். இப்படி ஒரு குடும்பத் தலைவரை பெற்ற அவரது குடும்பதா ருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறோம் என்றார்.

சாதி ஒழிப்புக்கான சென்னை பிரகடனம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி  பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் பேசுகையில், சாதி ஒழிப்புக்கான  சென்னை பிரகடனம் புத்தகத்தை நாம் அனைவரும் வாசிக்கவேண்டும். அதனை தமிழ்படுத்தும் பணியை சவுத் விசன் செய்து வருவதற்கு நன்றி  தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா வில் பட்டியலினத்தவரை பொது சமூகத்தோடு இணையவிடாமல் பிரித்து வைக்கும் தீண்டாமைக்கொடு மைக்கு எதிராக செயல்பட்டவர். மண்  டல் கமிசன் ஆவணத்தை முழுமை யாக படித்துவிட்டு விபி.சிங், பாஸ்வா னோடு பேசி அதற்கு புத்துயிர் கொடுக்க சகல யுக்திகளையும் மேற் கொண்டவர் கிருஷ்ணன் என்றார். 

சமூக நீதிக்கான தடைகளை தகர்த்தவர்
சவுத்விசன் பொறுப்பாளர். த.நீதி ராஜன் பேசுகையில், பி.எஸ்.கிருஷ்ணன் எளிய மக்களின் பிரச்சனை களை பேசுவதற்காக 15 மொழிகளை கற்றுஅறிந்திருந்தார். தனது 87வயதில் கென்ய மக்களின் வாழ்வியலை அறிய கென்ய மொழியை கற்றார். சாதி ஒழிப்புக்கான சென்னை பிரகடனத்தை கொண்டுவருவதில் அளப்பறிய பணியை செய்தார். சமூக  நீதி எந்தக்காலத்திலும் நீர்த்துப்  போகாமல் பார்த்துகொள்ளவேண்டும் என்று எங்களை எச்சரித்துக் கொண்டே இருந்தார். இடஒதுக்கீடு வேறு, சாதி ஒழிப்பு வேறு என்ற  ரெட்டைத்தன்மையை சகபோராளி களுக்கு விளங்கச்செய்தார். சமூக நீதிக்கு ஏற்பட்ட தடைகளை உடைத்து  தொடர்ந்து ஓய்வில்லாமல் களப் பணியாற்றினார் என்றார். இதில் சிபிஐ துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன், துணைப் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள் எம்.பூபாலன், ச.லெனின், பி.சுந்தரம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், பொதுச் செயலாளர் இரா.சரவணன், அருட் பணி கே.ஜான்குமார் (சமூக கண்கா ணிப்பகம்) உள்பட பலர் இதில் கலந்து  கொண்டனர்.