சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்: ஆணையரிடம் சிபிஎம் புகார்
கடலூர்,அக்.8- கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில்தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் வழிந்து ஓடுகிறது என்று மாநகராட்சிஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில்பாதாள சாக்கடை பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வழிந்து ஓடுவதுடன் வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் புகுந்து விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், கிளை செயலாளர் ஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட சுப்பிரமணியர் கோவில் தெரு பொதுமக்களும் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
