tamilnadu

img

பிப்.1 முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள்  

சென்னை,ஜன.21- கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, பொறி யியல், தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் கலைக்  கல்லூரிகளுக்கான செம ஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக வரும் பிப்.1 முதல்  பிப்.20ஆம் தேதி வரை நடத்த ப்படும் என்று உயர்  கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி தெரிவித்துள் ளார். இது தொடர்பாக சென் னையில் வெள்ளியன்று (ஜன.21) செய்தியாளர் களிடம் பேசிய அவர், “தற்போது கொரோனா தொற்று ஒமைக்ரான் என்ற பெயரில் அதிகரித்து வருவதால், நாங்கள் முதலில் அறிவித்திருந்த அறி விப்புகளில் சில மாற்றங் களைக் கொண்டுவர வேண்டும் என்று கோரி க்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில், கல்வித்துறைச் செயலர், கல்வித்துறை இயக்குநர்கள், துணைவேந்தர்கள், மாண வர்கள் அமைப்பைச் சேர்ந்த  மாணவர்கள், கல்லூரி ஆசிரி யர்கள் கலந்து பேசினோம். அதன் அடிப்படையில், முத லில் தேர்வுகள் ஆஃப் லைன் முறையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால், தற்போதைய சூழலில், அதற்கு சாத்தி யக்கூறுகள் குறைவாக இருக்கின்ற காரணத்தாலும், இந்த முறையில் தேர்வு நடத்தினால் நாட்கள் தள்ளிப் போகும் என்ற காரணத்தா லும், செமஸ்டர் தேர்வுகளை மட்டும் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி ஆன்லைனில் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்” என்றார். அனைத்து அரசு பொறி யியல் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் கலைக் கல்லூரிகளில் ஒன்று முதல் ஐந்தாவது செமஸ்டர் வரையிலான தேர்வுகளை ஆன்லைனில் தேர்வு நடத்துவது என்றும், அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் ஒரே மாதி ரியாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரி வித்தார். இந்தத் தேர்வுகளை பிப்ர வரி 1ஆம் தேதி தொடங்கி  பிப்ரவரி 20ஆம் தேதிக்குள்  முடித்துவிட்டது. அப்போ தைய சூழலைப் பொறுத்து, ஆன்லைன் வழியாகவோ அல்லது கல்லூரிகளை நேரடியாக நடத்துவது என்பது குறித்து தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இறுதி  செமஸ்டர் தேர்வு, நேரடியாக த்தான் நடத்தப்படும். ஆன்லைன் தேர்வுகளில்  முறைகேடுகள் நடைபெறு வதைத் தடுத்து சரியான  முறையில் நடத்த நடவடி க்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுகளை மாணவர்கள் ஒன்றிரண்டு நாள்கள் கால தாமதமானாலும் ஏற்றுக் கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரி வித்தார்.

;