பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாரிடம் விற்பனை செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் உள்ள படைகள உற்பத்தி தொழிற்சாலைகளின் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து புதனன்று (செப். 10) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஶ்ரீகுமார், ஏ.முகம்மது மீரா, ஏ.பாலமுருகன், டி.சுபாஷினி சுரேஷ், எம்.ஸ்ரீதர், ஏ.வினோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.