tamilnadu

img

கெரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கெரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் மார்ச் 31ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மூன்றாவது முறையாக ஆய்வுக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் 10 ,11,12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படும். மேலும்  அங்கன் வாரி குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுகள் குடும்பத்திடம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

தி வரை அனைத்து பள்ளி கல்லூரிகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.