tamilnadu

img

பள்ளிக் கல்வித் துறையின் கலைத் திருவிழா

பள்ளிக் கல்வித் துறையின் கலைத் திருவிழா

பாபநாசம், அக். 13-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது.  பாபநாசம் வட்டார அளவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 300-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.  பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல், களிமண் பொம்மை செய்தல், மாறு வேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், ஓவியம், நடிப்பு உள்ளிட்டவற்றில் திறனை வெளிப்படுத்தினர். இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் கலைத் திருவிழாவை ஒருங்கிணைத்தார்.