tamilnadu

img

தொழில் அதிபருக்கு 237 கோடி பழைய ரூபாயை கடனாக கொடுத்த சசிகலா... வருமானவரித்துறை ஆவணத்தில் தகவல்

சென்னை:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாததாக மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் 237 கோடியை அரசு பள்ளிகளுக்கு பருப்பு சப்ளை செய்யும் நிறுவனத்தின் அதிபருக்கு சசிகலா கடன்கொடுத்துள்ளதாக வருமானவரித்துறை ஆவணத்தில் தகவல்வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அரசுப் பள்ளிகளுக்கு பருப்பு சப்ளை செய்யும் நிறுவனத்தின் அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் 237 கோடி ரூபாயை சசிகலா கடன் கொடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வருமானவரித்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் புதிய தகவல் வெளியாகியுள்ளது.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி எந்தெந்த சொத்துகளை சசிகலா வாங்கினார் என்பது தொடர்பான விபரங்களை உயர்நீதிமன்றத்தில்  வருமான வரித்துறை தாக்கல் செய்தது.இதில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட போது, அன்று முதல் டிசம்பர் 30 வரை தம்மிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஏராளமான அசையா சொத்துகளை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும்பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை விநியோகம் செய்து வரும் திருச்செங்கோடு கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவன அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் 237 கோடி ரூபாயை சசிகலா கடன் கொடுத்துள்ளார்.அதற்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 237 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தர ஒப்புக்
கொண்டதாக குமாரசாமி தெரிவித்ததாகவும் வருமான வரித்துறையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

;