தனியார்மயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் எதிர்ப்பு
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் தனியார்மயமாக்கப்படுவதை கைவிடக் கோரியும், தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் செங்கொடி சங்கம் சார்பில் மண்டலம் 6இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ஜெ.பட்டாபி, பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, துணைப் பொதுச் செயலாளர்கள் டி.ராஜன் ஜி.முனுசாமி, துணை தலைவர் சுந்தரம், ஏ.எஸ்.அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதிக்குழு சார்பில் கியூபா ஆதரவு நிதி 9 ஆயிரம் ரூபாயை பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.கார்த்திக் வழங்க மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ராஜ்குமார், ஜி.நித்தியராஜ், நிர்வாகிகள் டேவிட், சீனிவாசன், சிந்து, பிரசன்னா, சவுந்தர்ராஜன், நித்தீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.