tamilnadu

img

தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்ற தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்ற தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

சென்னை, ஆக.23- சென்னையில் தேங்கியிருந்த வெள்ளத்தில் பணி செய்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக துரைப்பாக்கத்தில் 20 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக கண்ணகி நகரை சேர்ந்த வரலட்சுமி (வயது 30) பணியாற்றி வருகிறார். மழைபெய்து கொண்டிருந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆக.23) அதிகாலை பணிக்கு புறப்பட்டு 11வது குறுக்கு தெருவழியாக சென்று கொண்டிருந்தார்.  இந்த தெருவில் புதைவட மின்கம்பி பழுதடைந்து தெருவுக்கு மேலே கிடந்துள்ளது. அதிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு தேங்கிய வெள்ளத்தில் பரவி இருந்துள்ளது. இதனையறியாது அந்த வழியாக நடந்துசென்ற வரலட்சுமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகளும் கணவரும் உள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு வரலட்சுமி குடும்பத்திற்கு  20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இதேபோன்று, 194வது வட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் சாமுவேல் என்பவர் வெள்ளியன்று (ஆக.22) வீட்டு வாசலில் தேங்கியிருந்த மழைநீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சிபிஎம் கோரிக்கை  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை யில், “அரசின் கவனக்குறைவால் சாதாரன மழைக்கே 2 பேர் பரிதாப மாக பலியாகி உள்ளனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 50லட்சம் ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். மாநகரம் முழுவதும் உள்ள மின்பெட்டிகள், மின் வழித்தடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தூய்மைப்பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் உயர்தர கால் பூட்ஸ், கை க்ளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மின்கம்பிகளை  புதைவடமாக மாற்றுக! இந்நிகழ்வுகள் தொடர்பாக சோழிங்கநல்லூர் தொகுதி குடி யிருப்போர் பொதுநலச்சங்கத்தின் தலைவர் டி.ராமன் மின்வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளர். அதில், “கடந்த 2 நாட்களில் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரி ழந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் 190-வது வட்டம் பள்ளிக்கரணை, பழண்டியம்மன் கோயில் தெருவில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தார். இத்தகைய துயர சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. ஈ.சி.ஆர் சாலை உள்ளிட்டு பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை, குடிதண்ணீர் இணைப்பு பணி கள் நடந்து வருகிறது. இப்பணிகள் நடைபெறும் இடங்களில் புதைவட கம்பிகளை சரி செய்யாமல் சாலை யிலேயே போட்டுவிடுகின்றனர். இதனால் மக்கள் அச்சதோடு நடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, மேல்நிலை மின்கம்பி களை புதைவடமாக மாற்றும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். பழுதடைந்த புதைவடக்கம்பிகளை முறையாக புதைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.