tamilnadu

img

மருத்துவர்கள் செவிலியர்களுக்கு பாதுகாப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, ஏப்.30- கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்  பணியில் உள்ள மருத்துவர் கள், செவிலியருக்கு  முழு உடல் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள்  உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளனவா என விரி வான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் நிலை யில், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் அத்தி யாவசியப் பணியில் உள்ள காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட் டோருக்கு முழு  உடல் கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகர ணங்கள் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறி ஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரா யணன், நிர்மல் குமார் ஆகியோரது அமர்வில், காணொளி காட்சி மூலம் விசாரிக்கப் பட்டது. அப்போது, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது  மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனை  களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர் களுக்கு முழு உடல் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்  படவில்லை என பத்திரிகையில் செய்தி வெளியா கிய தைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இதுகுறித்து  அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல்  செய்ய, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல்  தலைமை வழக்கறிஞர், கால அவகாசம் கோரியதை  ஏற்ற நீதிபதிகள், மே 13ஆம் தேதிக்குள் அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தனர்.