பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில், பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.