வாலிபர் சங்க மாநில மாநாட்டிற்கு ரூ. 3 லட்சம் நிதி அளிப்பு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு ஓசூரில் வசிக்கும் மலையாளி தோழர்களின் செம்படைக் குழுவினர் மூன்று லட்சம் ரூபாய் நிதியாக அளித்தனர்.மாடர்ன் பர்னிச்சர் கணேசன், நாராயணன், எலிசா ஜார்ஜ், அமல் பீட்டக்கண்டி, பஷீர் சொப்னா பேஷன், பிரின்ஸ் ஜார்ஜ், இ.டி.கே.கண்ணன் உள்ளிட்டவர்கள் வாலிபர் சங்க மாநில மாநாட்டு நிதியாக அளித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.பத்ரி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், நடராஜன், பிரகாஷ், மாநகர செயலாளர் நாகேஷ்பாபு, மாநகரக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், பி.ஜி.மூர்த்தி, மூத்த தோழர் சேதுமாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
