பழனியில் உண்டியல் மூலம் ரூ.3.36 கோடி வருவாய்
பழனி, மார்ச் 25- பழனி மலைக் கோவிலில் செவ்வாய்க்கிழமை உண்டி யல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரொக்கம் ரூ.3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630ம், தங்கம் 576 கிராம், வெள்ளி 8,886 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,630 நோட்டு கள் கிடைத்துள்ளது. இதேபோல், திருஆவினன்குடி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.16 லட்சத்து 55 ஆயிரத்து 35 கிடைத் துள்ளது. உண்டியல் எண்ணிக்கை கோவில் இணை ஆணையாளர் செ.மாரிமுத்து, திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நாகவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருக்கோவில் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இது கடந்த 25 நாட்களின் வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல்
அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை சின்னாளப்பட்டி, மார்ச் 25- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தில் அடுத்தடுத்து 2 கோவில் களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. சின்ன அய்யம்பாளையம் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே செல்வவிநாயகர் கோவில் மற்றும் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. நள்ளிரவில் இந்த கோவில்களுக்குள் புகுந்த அடை யாளம் தெரியாத மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல்களை உடைத்து ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்ப வம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் கோவிலுக்குள் உலவும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. இது குறித்து சின்ன அய்யம்பாளையம் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் நிர்வாகிகள், பட்டி வீரன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்ததுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
நத்தம், மார்ச் 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நத்தம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம் அருகே கோட்டையூர்- நல்லூர் பகுதி யில் வீட்டில் வைத்து அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறக்கும் படை சோதனையில் ரூ.1.13 லட்சம் பணம் பறிமுதல் நத்தம், மார்ச் 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடகிப்பட்டி ஊராட்சி குப்பிலிபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உக்கிரபாண்டி தலைமை யில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடு பட்டனர். அப்போது நத்தம் நோக்கி சென்ற இரு சக்கர வாக னத்தை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 100 பணம் இருந்தது. இது தொடர்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த வடமதுரை-புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலன் மற்றும் மாயகிருஷ்ணன் ஆகியோரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நத்தம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொட ர்ந்து கைப்பற்றபட்ட பணம் கருவூலத்தில் ஒப்ப டைக்கப்பட்டது.
வாகனம் மோதி வாலிபர் பலி
சின்னாளப்பட்டி, மார்ச் 25- திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (28). இவரது தங்கையின் மக ளுக்கு நிலக்கோட்டை பள்ளபட்டியில் மொட்டை எடுக்கும் விழாவிற்கு கொடைரோடு அருகே உள்ள மாவூர் டேம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திண்டுக்கல் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயம் அடைந்த சூரியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெடிகுண்டு மிரட்டல்
திண்டுக்கல், மார்ச் 25- திண்டுக்கல் அருகே உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் கலந்து கொள்ள இருந்த திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து தர்மராஜ் தலைமை யிலான சிறப்பு காவல்படையினர் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதன் பின்னர் திருமண விழாவிற்கு எஸ்.வி.சேகர் காலதாமதமாக வந்து சென்றார்.
தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை வெளியீடு
தேனி, மார்ச் 25- தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்ட மன்றப் பொதுத்தேர்தல் 100 சத வீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு இலச் சினையை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டார். தமிழ்நாட்டின் திராட்சை சாகுபடி யில் தேனி மாவட்டம் மிகப்பெரும் பங்களிப்பை கொண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திரா ட்சை வடிவிலான இலச்சினை வடிவ மைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இலச்சினையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எளி தில் நினைவில் கொள்ளும் வகையில் உள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் மற்றும் தேர் தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு பணி தொடங்கியது
தேனி, மார்ச் 25- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறை யில் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகு திகளுக்கு சேர்த்து 1,394 வாக்கச்சாவடி மையங்க ளுக்கு 1,671 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,671 கட்டுப்பாட்டுக் கருவிகளும், வாக்குப் பதிவை சரிபார்க் கும் 1,810 இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகளின் பிரதிநிதி களின் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின் னணு வாக்குப்பதிவு இயந் திர சேமிப்புக் கிட்டங்கி திறக் கப்பட்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் சம்பந்தப்பட்ட சட்ட மன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி களை மாவட்ட தேர்தல் அலு வலர் பார்வையிட்டார். முன்னதாக, வேட்பாளர் / அரசியல்கட்சிகளின் முக வர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை ஒழுங்குப் படுத்தும் பொருட்டு தேர்தல் தொடர்பான செலவினங்க ளுக்குரிய விலை / வாடகை / கூலி ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்ட விலைப்பட்டி யல் குறித்து அனைத்து அங் கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரமுகர்கள் கல ந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் ரூ.2.18 கோடி பறிமுதல்
மதுரை, மார்ச் 25- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலை யில், மதுரை மாவட்டம் முழுவதும் புதனன்று மாலை வரை மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைகளில் ரூ.2.18 கோடி மதிப்பி லான ரொக்கம் மற்றும் பல்வேறு சட்டவிரோதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில் அதிகள வில் ரொக்கப் பணம், மதுபானம், விலையுயர்ந்த உலோ கங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.155.85 லட்சம் ரொக்கப் பணம், 18,083 லிட்டர் மதுபானம், ரூ.59.46 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.2.26 லட்சம் மதிப்பி லான இலவசப் பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் அடங்கும். தொகுதி வாரியாக பார்க்கும்போது, மதுரை கிழக்கு தொகுதி யில் அதிகபட்சமாக ரூ.47.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மதுரை தெற்கு தொகுதியில் ரூ.38.05 லட்சம், மேலூர் தொகுதியில் ரூ.28.18 லட்சம், மதுரை மத்தி தொகுதியில் ரூ.23.32 லட்சம் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் ரூ.22.24 லட்சம் மதிப்பி லான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மிகக் குறைவாக திருமங்கலம் தொகுதியில் ரூ.4.08 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை கிழக்கு தொகுதியில் மட்டும் சுமார் 18,039 லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரி வர்த்தனை மற்றும் வாக்காளர்களை கவரும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.