tamilnadu

img

தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்... தமிழக அரசு அறிவிப்பு

சென்னை
தமிழகத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில்  தீப்பெட்டி தொழில் அதிகம் நடைபெறுகிறது. சொல்லப்போனால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமே தீப்பெட்டி தொழில் தான். தற்போது ஊரடங்கு காரணமாக இந்த தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள் வேலையின்றி வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்படும். இஎஸ்ஐ கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். இதற்காக ரூ.2,177 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது" எனக் கூறியுள்ளார். 
 

;