சென்னை
தமிழகத்தில் தலைநகர் பகுதியான சென்னையில் கொரோனா பரவல் ஜெட் வேகத்தில் உள்ளது. குறிப்பாக ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தையில் மையம் கொண்டிருந்த கொரோனா சென்னை மாநகரத்தை மட்டுமல்லாது தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களை புரடடியெடுத்தது. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து உருவான மொத்த கொரோனா பாதிப்பு 500-யை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகளுக்கு அனுமதி வழங்கியது. இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பது தான். இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.