தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
முழு விவரம்:
தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம் ) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
2 மாதங்களுக்கு 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.27.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.72.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.297.50 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.155 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.395 உயர்த்த பரிசீலனை
2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.565 உயர்த்த பரிசீலனை