tamilnadu

img

பழிவாங்கும் அஷாகி நிறுவனம்: குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், ஏப்.5-


காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் `ஹூண்டாய், டொயோட்டோ, நிசான், டைம்லர், மகேந்திரா போன்ற கார்மற்றும் ஆட்டோ தொழிற்சாலைகளுக்கு கண்ணாடி தயாரிக்கக் கூடியஅஷாகி இந்தியா லிமிடெட்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 800 பேர் பணியோற்றி வருகின்றனர். ஆனால் 250 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர். ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளுக்கு 28தொழிலாளர்களை நிர்வாகம்பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் நல திட்டங்களை அமல்படுத்த தொழிற் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அஷாகி நிறுவன தொழிற்சங்க நிர்வாகிகள் ஜோசப் மைக்கேல், லட்சுமணன், பாலாஜி முன்னிலைவகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாநிலச்செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர் இ. கோவலன், பொருளாளர் மதுசூதனன், `ஹூண்டாய் மோட்டார் தொழிற்சங்க இணைச் செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் நகரச் செயலாளர் சி. சங்கர்,வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

;