tamilnadu

விஐடியில் பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

வேலூர்.ஏப்.30-விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தேர்வு முடிவுகள் திங்களன்று (ஏப்.30) வெளியிடப்பட்டன. இதில், முதல் 10 இடங் களை கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் மாநித்தை சேர்ந்த மாணவர்கள் பிடித்துள்ளனர்.இது குறித்து விஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக் (2019) பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும், துபாய், குவைத், மஸ்கட் ஆகிய வெளி நாட்டிலும் கணினி முறையில் நடத்தப்பட்டன.

இந்த நுழைவுத் தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 462 மாணவ, மாணவிகள் எழுதினர்.இத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சாய் சாகேதிகா செக்கூரி முதலிடமும், ஆந்திர மாணவர் குரஜால ஜோயல் மோசஸ் இரண்டாமிடமும், ராஜஸ்தான் மாணவர் துஷார் ஜெயின் மூன்றாமிடமும் பிடித்தனர்.விஐடி நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, ரேங்க் அடிப்படையில் மே 9 முதல் நடைபெற உள்ளது. நுழைவுத் தேர்வில் 1 முதல் 10 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 9ஆம் தேதியும், 10,001 முதல் 30 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 10 ஆம் தேதியும், 30,001 முதல் 50 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 11-ஆம் தேதியும், 50,001 முதல் 70 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 13-ஆம் தேதியும், 70,001 முதல் 90 ஆயிரம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 14-ஆம் தேதியும், 90,001 முதல் 1.10 லட்சம் வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 15-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளன.

தகுதிபெற்ற மாணவர்கள் விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.விஐடி-யின் ஜி.வி. பள்ளி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று விஐடியில் சேரும் மாணவர்களுக்கு பி.டெக் பட்டப்படிப்பின் 4 ஆண்டு காலமும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டணச் சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும், 101 முதல் 1000 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகின்றன. இதேபோல், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் தலா ஒரு மாணவருக்கும், ஒரு மாணவிக்கும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் 100 சதவீத கல்விக் கட்டணச் சலுகை, உணவுடன் இலவச விடுதி வசதி ஆகியவற்றுடன் சேர்க்கை வழங்கப்பட உள்ளது. 

;