மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு, மனை பட்டா வழங்க வேண்டும் குடியாத்தம் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்
வேலூர், ஜூலை 14 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குடியாத்தம் ஒன்றியம் 2வது மாநாடு மாவட்டக்குழு உறுப்பினர் என்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். தசரதன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க, ரஞ்சித் குமார் வரவேற்றார். வேலூர் மாவட்ட துணைத் தலைவர் கோபால ராஜேந்தி ரன் மாநாட்டை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வேலை அறிக்கையை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார் மாவட்ட பொருளா ளர் எ.குருமூர்த்தி, சிபிஎம் குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலா ளர் கே.ஜெ.சீனிவாசன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திபேசினர். தலைவராக ரஞ்சித் குமார், செயலாளராக என்.வெங்கடேசன், பொருளாளராக குமார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கமிட்டிதேர்வு செய்யப்பட்டனர். விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவி தொகை வழங்க வேண்டும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.