தெருநாய்களுக்கான கருத்தடை மையத்தை இடமாற்றக் கோரிக்கை
சென்னை, செப்.19- பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்துகின்ற சென்னை கண்ணப்பர் விளையாட்டுத் திடலில் தெருநாய்களுக்கான கருத்தடை மையம் அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.19) சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வி. சிவகிருஷ்ணமூர்த்தியிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதிச் செயலாளர் பி.வி.ஹேமந்த் குமார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட வி.சிவகிருஷ்ணமூர்த்தி உடனடியாக மாற்று இடம் பார்ப்பதாக உறுதியளித்தார். இதில் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் ஜா.பார்த்திபன், பொருளாளர் லோ.விக்னேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.