தையல் கலைஞர்களுக்கு இயந்திரம் வழங்கக் கோரிக்கை
திருவண்ணாமலை, ஜூலை 21- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஞாயிற ன்று திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன், வந்தவாசி நிர்வாகி ஏ. அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் வழங்கக்கோரி சமூக நலத்துறை, சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு உடனடியாக இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும். அமைப்பு சாரா நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தையல் கலைத் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் மற்றும் வறுமைக் கோட்டில் உள்ளவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவு அரைக்கும் இயந்திரம் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.