tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு ஊதிய பயன்கள் வழங்க கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு ஊதிய பயன்கள் வழங்க கோரிக்கை

சிதம்பரம், செப். 15- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க பொது குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். சங்க பொதுச் செயலாளர் இளங்கோ சங்க வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் மகேந்திரன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். சங்கத்தின் உறுப்பினர் அறிவுக்கண்ணு அனைவரையும் வரவேற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பணி ஓய்வு பெற்ற 1800க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பயன்களையும், ஓய்வூதிய நிலுவைத் தொகைகளையும் வழங்கிடாத பல்கலைக்கழக நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும், நிலுவையில் உள்ள ஊதிய பயன்களை முழுமையாக உடனடியாக வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சங்