tamilnadu

img

பாபநாசம் கிளை நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

பாபநாசம் கிளை நூலகத்திற்கு  சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

பாபநாசம், அக். 18-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிளை நூலகம் தற்போது பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாடகையின்றி இயங்கி வருகிறது.  முழுநேர கிளை நூலகமான. இந்த நூலகத்தில் சமயம், சிறுவர் கதைகள், நாவல், கட்டுரை, மருத்துவம் உள்ளிட்ட பல தலைப்புகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 5,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நூலகத்திற்கு தினமும் 60 பேர் வரை வந்து செல்கின்றனர். போட்டித் தேர்விற்கான புத்தகங்கள் இருந்தும், படிப்பதற்கான வசதி இல்லாததால் பலர் தஞ்சாவூர், கும்பகோணம் செல்கின்றனர். இந்த நூலகத்தில் கழிப்பறை வசதியும் இல்லை.  இந்த நூலகத்தில் 3 பேர் பணியில் உள்ளனர். இதில் 2 பேர் பெண்கள். இது வரை வாடகை கட்டடத்தில் மட்டுமே இயங்கி வரும் பாபநாசம் கிளை நூலகத்திற்கு சொந்த கட்டடம் கிடையாது. ராமலிங்கம், சண்முகம் எம்.பிக்களாக இருந்தபோது, இதில் கவனம் செலுத்தவில்லை. தற்போது எம்.பி.க்களாக உள்ள கல்யாண சுந்தரம், வாசன், சுதா ஆகியோர், இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நூலகத்திற்கு வருபவர்களின் கருத்தாகும்.