காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
கொத்தடிமை கூலி முறைகளான தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட் சோர்சிங் மற்றும் காண்ட்ராக்ட் பணி நியமனம் போன்ற முறைகளை ரத்து செய்து தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் எஸ். சரவணன் தலைமையில் வெள்ளியன்று (ஆக 8) ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பரிசலா வான சாஸ்திரி, பொருளாளர் ஆனந்தபாபு, துணைத் தலைவர்கள் ஜெ. மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக கிளை இணை செயலாளர் ஆர். வெங்கடேசன் நன்றி கூறினார்.