tamilnadu

img

வெளியானது வலிமை திரைப்படத்தின் டிரைலர் 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை பட வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்னதாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகிய நிலையில், வலிமை படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடலும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நீண்ட நெடிய காத்திருப்புக்குப் பிறகு படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறது அஜித்தின் வலிமை படக் குழு. அதன்படி இன்று வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் #ValimaiTrailerFeast என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரும் டிசம்பர் 30ம் தேதிதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

;